கோயம்புத்தூர்: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் கோயில்களில் பக்தர்கள் வழிபட அரசு தடை விதித்துள்ளது.
இதனைக் கண்டித்தும் அனைத்து நாள்களிலும் கோயிலை திறக்க வலியுறுத்தியும் அவினாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் முன்பு 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.