தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கோதாவரி, காவிரி இணைப்பிற்கு தெலங்கானா அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது' - அமைச்சர் வேலுமணி - Minister Velumani

கோவை: கோதாவரி, காவிரி இணைப்பிற்கு தெலங்கானா அரசு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

கோதாவரி, காவேரி இணைப்பிற்கு தெலுங்கானா அரசு முழு ஒத்துழைப்பு -அமைச்சர் வேலுமணி!
கோதாவரி, காவேரி இணைப்பிற்கு தெலுங்கானா அரசு முழு ஒத்துழைப்பு -அமைச்சர் வேலுமணி!

By

Published : Mar 11, 2020, 11:28 PM IST

கோவை விமான நிலையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோதாவரி, காவிரி இணைப்பிற்கு தெலங்கானா அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. அதற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முழு உதவிகளைச் செய்தார்.

அமைச்சர் வேலுமணி பேட்டி

இன்று நடந்த மானியக் கோரிக்கையில் கோவை மாநகராட்சியில் உள்ள வ.உ. சிதம்பரனார் பூங்கா விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சிங்கம், புலி போன்ற விலங்குகளைக் கொண்டுவர ஒப்புதல் கொடுத்துள்ளனர். இதன் மூலம் கோவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details