தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒரே டம்ளரில் 5 வகையான டீ போட்டு அசத்தும் மாஸ்டர்' - ஒரே க்ளாஸில் ஐந்து வகையான தேநீர்

கோவை: கணுவாய் அருகே தேநீர் கடை நடத்திவரும் மாணிக்கம் என்பவர், ஒரே டம்ளரில் ஐந்து சுவையில் தேநீர் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.

tea

By

Published : Aug 13, 2019, 1:59 PM IST

Updated : Aug 13, 2019, 2:28 PM IST

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர், அப்பகுதியில் தேநீர் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது பல்வேறு வகையான தேநீரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி புதுமை படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கணுவாய் பகுதியில் தற்போது தேநீர் கடை ஒன்றை நடத்தி வரும் மாணிக்கம், ஒரே டம்ளரில் மூன்று முதல் ஜந்து வகையான தேநீர் வழங்கி வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறார். இந்த புதுமையைக் கண்ட அப்பகுதி மக்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அந்த கடைக்குச் சென்று தேநீர் அருந்துகின்றனர்.

தேநீரின் மேற்பகுதியில் இடப்பட்டுள்ள குறியீடுகள்

இவர் தயாரிக்கும் தேநீரில் பால், பூஸ்ட், டிக்காஷன், ஹார்லிக்ஸ், போன்விட்டா என அனைத்தும் ஒரே டம்ளரில் கிடைப்பதே வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. மேலும் தேநீரின் மேல் பகுதியில் நட்சத்திரம், இதய வடிவிலான குறியீடுகளையும் டிக்காஷனில் போட்டு தரப்படுகிறது. ஒரே டம்ளரில் அளிக்கப்படும் இந்த தேநீரானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சுவைகளை அளிப்பதால் வெளி ஊர்களில் இருந்து பலரும் மாணிக்கத்தின் கடையை தேடிவருகின்றனர். அவர் அளிக்கும் இந்த லேயர் தேநீருக்கான விலையாக ரூ. 30 என நிர்ணயம் செய்துள்ளார்.

ஒரே க்ளாஸில் ஐந்து வகையான தேநீர் அளிக்கும் டீ மாஸ்டர்

இது குறித்து மாணிக்கம் கூறுகையில், ஆரம்பம் முதல் தேநீர் வியாபாரம் செய்து வந்ததால் அதில் ஏதேனும் புதுமை செய்ய வேண்டும் என சிந்தித்தேன். அதை ஐந்து வகையான சுவை கொண்ட தேநீரை வழங்கி வருவதன் மூலம் செய்துள்ளேன். மேலும், நீண்ட தொலைவில் இருந்து தனது லேயர் தேநீர் அருந்த மக்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Last Updated : Aug 13, 2019, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details