கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஃபைசல் என்பவர் ரயில் நிலையத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். இதேபோல செல்வபுரம் பகுதி இந்து முன்னணி அமைப்பின் நகரச் செயலாளராக உள்ள சூர்யா என்பவரும் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை கோவை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் வாடகை எடுப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதில் சூர்யா, ஃபைசலைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ஃபைசல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.