தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர் கைது! - ilelgale liquor sale

கோவை: பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியரை, காவல் துறையினர் கைது செய்தனர்.

Tasmac worker
டாஸ்மாக் ஊழியர் கைது

By

Published : May 30, 2021, 6:51 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளைய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் கிராம சேவை மையக் கட்டிடத்தின் பின்புறம் மதுபானம் விற்பனை நடைபெறுவதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில், பொள்ளாச்சி தாலுகா காவல் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான தனிப்படை, அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, மதுபானங்களை விற்பனை செய்து வந்த நபரைக் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 359 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்நபர் நஞ்சேகவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பதும், டாஸ்மாக் ஊழியராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். டாஸ்மாக் ஊழியர் மது விற்பனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details