நாடு முழுவதும் ஊரடங்கு மூன்றாம் முறையாக மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வைரஸ் தொற்று அதிகளவில் பாதிக்கப்படாத இடங்களில் மட்டும் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளையும் இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, இந்த கடைகள் திறக்கப்பட்டன. இதற்குப் பல்வேறு கட்சியினர், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
மக்கள் முற்றுகையால் டாஸ்மாக் கடை மூடல்! - மக்கள் முற்றுகையால் டாஸ்மாக் மூடல்!
கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொது மக்கள் முற்றுகையிட்டதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இந்நிலையில் இன்று கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மதுக்கடைகளை திறக்க முயன்றபோது, அப்பகுதி பெண்கள், குழந்தைகள் என 30க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களிடமும் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் அலுவலர்கள் கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தப்பின்னரே அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் பார்க்க:நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து!