தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழை இலை, தோரணங்களுடன் படு ஜோராக தயாராகியிருக்கும் டாஸ்மாக் - மதுபான கடைகள்

கோவை: மதுபான கடைகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் படு ஜோராக நடந்துவருகின்றன.

மதுபான கடைகள்
மதுபான கடைகள்

By

Published : May 6, 2020, 4:59 PM IST

Updated : May 6, 2020, 6:29 PM IST

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாள்களாக இந்தியாவில் மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் திண்டாடி வந்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகள் தவிர பிற பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, டாஸ்மாக் கடைகள் முன்பு பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தனிமனித இடைவெளி கடைப்பிடித்து வாடிக்கையாளர்கள், மதுபானம் வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குளத்துபாளையத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் இன்று வாழை இலை தோரணம் கட்டி, ஹோம குண்டம் வளர்த்து ஊழியர்கள் பூசையிட்டு, மதுவிற்பனைக்கு தயார் செய்துள்ளனர். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 295 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 88 மதுபான கடைகள் திறக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

இதையும் படிங்க:மதுபானக் கடைகளுக்கு மதுபானம் அனுப்பும் பணி தீவிரம்!

Last Updated : May 6, 2020, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details