கோயம்புத்தூர்: சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் சினிமா படப்பிடிப்பு மற்றும் திரைத்துறைச் சார்ந்த பல்வேறு விஷயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கியுப் (QUBE) மற்றும் பிராட்வே (Broadway) சினிமாஸ் இணைந்து 'எபிக்' (EPIQ) தொழில் நுட்பத்துடன் இயங்கும் திரை வசதியுடன் திரையரங்கு மற்றும் லேசர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஐ-மேக்ஸ் திரையரங்கத்தை அறிமுகம் செய்துள்ளன.
கோவை அவிநாசி சாலையில் 9 திரைகளுடன் சினிமாவிற்கு என்றே பிரத்யேகமாக பிரேட்வே சினிமாஸ் நிறுவனம், மால் ஒன்றை திறந்து வைத்துள்ளது. இதில் 9 சராசரி திரைகள், ஒரு கோல்டு திரையரங்கம், ஒரு EPIQ திரையரங்கம், ஒரு IMAX திரையரங்கம் உள்ளது. இதில், ஏற்கனவே 6 சராசரி திரையரங்குகள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தற்போது இதர மூன்று சிறப்பு வாய்ந்த திரையரங்குகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதுதான் தமிழகத்தின் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள EPIQ தொழில் நுட்பத்துடன் கூடிய திரையங்கு ஆகும்.
இதையும் படிங்க:வெளியானது 'ஜெயிலர்' பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!
சிறப்பம்சங்கள்:வழக்கமான திரையரங்குகளில் 2:35 என்ற விகிதாசாரத்தில் திரை இருக்கும். ஆனால், இந்த எபிக் திரையரங்கில் 1:89 என்ற விகிதாச்சாரத்தில் திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 70 அடி அகலம், 37 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான பெரிய திரையாகும்.
இதனால் இந்த திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் போது பிரமாண்டத்தை உணர்வதோடு மற்றும் துல்லியமான படக்காட்சியையும் காண முடியும். RGB புரோஜெக்ட்டர், Dolby Atmos ஒலியுடன் 425 இருக்கையுடன் இந்த EPIQ திரையரங்கம் அமைந்துள்ளது.