ரயில்வே நிர்வாகம் சார்பில் சென்னை பெரம்பூர் ரயில்வே பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) அப்ரண்டிஸ் பணிக்காக, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'ரயில்வே பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை' - நன்றி தெரிவித்த தமிழிசை! - railways
சென்னை: ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னரிமை வழங்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
thamilisai
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென தமிழக பாஜக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே அமைச்சருக்கு நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.