கோயம்புத்தூர்: திருமலையம்பாளையம் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு விழா நேற்று (மார்ச் 14) நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கான மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், சமூக முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் 25 சமூகப்பணியாளர்களை ஊக்குவிக்ககும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு தெலுங்கானா ஆளுநர் விருது வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “வாழ்க்கையில் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும். திட்டமிடுதல் மூலம் வாழ்க்கை வெற்றியாக அமையும். ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டமிட்டு வாழ வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.