தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மூடப்பட்டுள்ள வெளி மாநில எல்லைகள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லையில் ஆனைக்கட்டி பகுதியில் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள அட்டப்பாடி, சோலையூர், அகழி, கூலிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆகவே, இந்த மாணவர்கள் ஜூன் 15ஆம் தேதி தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.