தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி.ஏ. உயர்வு ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்! - Covai News Today

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான டி.ஏ. உயர்வு ஓய்வூதியத்தை வழங்கக் கோரி கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் போராட்டம்
ஊழியர்கள் போராட்டம்

By

Published : Dec 29, 2022, 8:06 PM IST

டி.ஏ. உயர்வு ஓய்வூதியம் வழங்க கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்...

மேட்டுப்பாளையம்: நீதிமன்ற உத்தரவின்படி அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம் வழங்க கோரி கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இதனால் 86 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதாகவும் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமந்துகொண்டு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேட்டுப்பாளையம் மெயின் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அரசு ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நல அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:தீண்டாமை விவகாரம்: கோயிலில் ஒன்றாக வழிபாடு நடத்த தயாராகும் மூன்று சமூக மக்கள்

ABOUT THE AUTHOR

...view details