தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜஸ்தானில் சிக்கிக் கொண்ட தமிழ்நாடு மாணவ - மாணவிகள் - தேசியச் செய்திகள்

கோவை: நீட் தேர்வு பயிற்சிக்காக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு மாணவ- மாணவிகள் ஊரடங்கு காரணமாக, சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் சிக்கிக் கொண்ட நீட் மாணவர்கள்
ராஜஸ்தானில் சிக்கிக் கொண்ட நீட் மாணவர்கள்

By

Published : Apr 29, 2020, 2:07 PM IST

ராஜஸ்தான் மாநிலம், கோடா பகுதியில் ஏலன் என்ற பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நீட் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளுக்காகச் சென்ற மாணவர்கள் பெற்றோர்களுடன் தங்கிப் படித்து வந்தனர். கோவை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் ராஜஸ்தானில் தங்கி இருந்தனர்.

ராஜஸ்தானில் சிக்கிக் கொண்ட நீட் பயிற்சி பெறும் தமிழ்நாடு மாணாக்கர்கள்

இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதேநேரம் மற்ற மாநில மாணவர்கள், அந்தந்த மாநில அரசின் உதவியால் சொந்த ஊர் சென்று விட்டதாகவும், தமிழ்நாடு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் மட்டுமே தற்போது இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவ - மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

ராஜஸ்தானில் சிக்கிக் கொண்ட நீட் பயிற்சி பெறும் தமிழ்நாடு மாணவ - மாணவிகள்

இதனால் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில் கோவையைச் சார்ந்த எட்டு மாணவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லியில் ஒரே நாளில் 201 பேர் குணமடைந்தனர்!

ABOUT THE AUTHOR

...view details