கோயம்புத்தூரில் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் கே.பழனிசாமி, 35 ஆண்டுகளாக குறைந்த ஊதியம் வாங்கும் சத்துணவு ஊழியர்களை இந்த அரசு அலக்கரிக்கிறது. 2016ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சத்துணவு ஊழியர்கள் ஊதியத்தை நிரந்தரமாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஆனால், தற்போது உள்ள முதலமைச்சர் அதை நிறைவேற்றவில்லை. சத்துணவிற்காக அரசு ஒதுக்கிய 98 கோடி ரூபாயை தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், ஓய்வு பெற்ற உழியர்களுக்கு ரூ. 2,000 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே அரசு வழங்கி இருக்கக் கூடிய 7,850 ரூபாயை வழங்க வேண்டும் இந்த கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறித்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தையும் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் பின்பு, சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 300க்கும் மேற்பட்டோர் கைது