கோவை :கரோனா தொற்று காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இரு மாநிலங்கள் இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டுமென கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடந்த 6ஆம் தேதி கடிதம் எழுதினார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு நேற்று(நவ.30) தமிழ்நாடு-கேரளா இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து 23 மாதங்களுக்கு பிறகு இன்று (டிசம்பர்.1) காலை முதல் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து தொடங்கியது