கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக, கோயம்புத்தூரிலிருந்து கேரளாவிற்கும், அங்கிருந்து கோயம்புத்தூருக்கும் வரும் அனைத்து வாகனங்களின் தொடர்பும் நிறுத்தி வைக்கப்படுகிறது என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் இராசாமணி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின்படி, கேரளாவையும், கோயம்புத்தூரையும் இணைக்கக்கூடிய 14 வழித்தடங்களும் மூடப்படுகின்றன. தமிழ்நாடு, கேரள வாகனங்கள் எதுவும் சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டாது. வாளையார், சோலையார் அணை, டாப்சிலிப், மீனாட்சிபுரம், கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுபுணி, வீரப்பகவுண்டனூர், வேலந்தாவளம், மேல்பாவி, ஆனைக்கட்டி, முள்ளி, வழுக்குபாறை ஆகிய வழித்தடங்கள் அடைக்கப்படுகின்றன.