வனத் துறை சங்கத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கோவையிலுள்ள தமிழ்நாடு வனக்கல்லூரி வளாகத்தில் நேற்று (பிப். 7) நடைபெற்றது. இதில் ஈரோடு வனச்சரகர் சிவக்குமார், பொள்ளாச்சி வனவர் மாரிமுத்து ஆகியோர் தேர்தல் அலுவலர்களாகப் பணியாற்றினர்.
தமிழ்நாடு வன அலுவலர்களின் கோவை மாவட்ட கிளை தேர்தல்! - போட்டியின்றி தேர்வு
கோவை: தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க கோவை மாவட்ட கிளைச் சங்கத்தின் தேர்தலில் தலைவர் உள்பட பிற பதவிகளுக்குப் போட்டியிட்ட அனைவரும் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர்.
Tamil Nadu Forest Officers Coimbatore District Branch Election!
இதில் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், இணை செயலாளர்கள் ஆகிய பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக வனச்சரகர் சிவப்பிரகாசம், துணைத் தலைவராக வனவர் சுரேஷ், செயலாளராக வனவர் மூர்த்தி, பொருளாளராக வனக்காப்பாளர் கார்த்திகேயன், இணைச் செயலாளராக வனக்காவலர் கருப்புசாமி ஆகியோர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:’அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நல்லது நடக்கும்’: மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்
Last Updated : Feb 8, 2021, 10:27 AM IST