கோவை:இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் மெகா பட்டய கணக்காளர்களின் மாணவர் மாநாடு (Mega Chartered Accountants Student Conference) கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இன்று (டிச.24) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை குறித்து பேசினார். அப்போது அவர், 'இந்த மாணவர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி. நாடே உங்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். 9 பிஸ்னர்ஸ் கிளஸ்டர்ஸ்க்கு (Business Clusters) கோவை தாய் வீடாக உள்ளது.
பெரும்பான்மையானவர்கள் தோல்வியில் இருந்து வந்துள்ளனர். ஹீமேன் போல பறந்தோ, இயேசுநாதர் போல தண்ணீரில் நடந்திடவோ முடியாது. தோல்வியில் இருந்து விழுந்துதான் வர முடியும். உங்கள் உடம்பில் உள்ள தழும்புகளை மறந்துவிடாதீர்கள். தோல்வியில்லாமல் வெற்றி அமைந்ததாக சரித்திரம் இல்லை' எனப் பேசினார்.
காற்றில் பறந்ததா திமுகவின் தேர்தல் அறிக்கை?:இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தனர். முழுவதுமாக பொருளாதார நிலைமையை தெரிந்துதான் ஆட்சிக்கு வந்தார்கள். பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவில் பட்டப் படிப்பு படித்தவர்கள் என சொல்கிறார்கள். சொன்னதை செய்யவில்லை என்பது தான் பாஜகவின் கேள்வி. வேறு மாநிலத்தில் பாஜக சொல்லவில்லை; ஆனால், செய்தார்கள். உத்தரப்பிரதேசம், புதுச்சேரியில் எவ்வளவு குறைத்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள் ஏன் செய்யவில்லை.
நாடெங்கும் கேஸ் எப்படி வந்ததது:திமுக முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது 67% கேஸ் பயன்படுத்தினர். இன்று 99.3% பேர் கேஸ் பயன்படுத்துகின்றனர். பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நாம் அதை இம்போர்ட் பண்ணுகிறோம். முன்பு இருந்ததை விட இரண்டு மடங்காக இம்போர்ட் பண்ண வேண்டிய நிலைமையுள்ளது. அரசு போராடிக் கொண்டு வந்து கொடுக்கிறது. குறைந்த விலைக்கு கொண்டு வருகிறது.
உலக அரசியலில் திமுக: உலகளவில் ஐரோப்பிய யூனியன் கட்டாயப்படுத்துகின்றனர். ரஷ்யாவிடம் வாங்கினால், இப்படித்தான் வாங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். இந்தியா மட்டும்தான் சர்வதேச அளவில் துணிந்து பேசுகிறோம். இந்தியாவிற்கு கேஸ் பெட்ரோல் எங்கு குறைந்த விலைக்கு கிடைக்கிறதோ? அங்கு வாங்குவோம். செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தாதீர்கள் உலகம் முழுவதுமே பிரச்சனை. உக்ரைன் ரஷ்யா என பல. அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்து பார்க்கையில் விலை எவ்வளவு உள்ளது என்று ஒப்பிட்டு பாருங்கள். திமுக பேப்பர் படிக்கவில்லை. குண்டு சட்டியில் அரசியல் செய்கிறது.
எகிறும் மின் கட்டணம்;மத்திய அரசுக்கு என்ன பங்கு?:மின்சாரத்தில் மத்திய அரசு விலை ஏற்றியதாக ஒரு லெட்டர் காட்டுங்கள். இல்லையென்றால் உங்கள் ஊடகத்தில் லீக் செய்யுங்கள். யாரும் யாரையும் ஏற்ற சொல்லவில்லை. விண்டு எனர்ஜி, சோலார் முதல் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. பிஜிஆர் போன்ற பிரைவேட் நிறுவனத்தை ஆதரிக்க விலை ஏற்றம் நடைபெற்றுள்ளது. சாமானிய மக்களுக்கு விலை ஏற்றம் பெரிய பாதிப்பு.
மாநிலமெங்கும் மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பாகாது எனவும், பிஜிஆர் போன்ற தனியார் நிறுவனத்திற்காகவே இம்மாதிரியான விலையேற்றம் எனவும், மாநில அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய தயாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.