தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நவீன தீண்டாமையை ஸ்டாலின் பின்பற்றுகிறார்' - பாஜக தலைவர் முருகன் - பாஜக தலைவர் முருகன்

கோயம்புத்தூர்: புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நவீன தீண்டாமையை பின்பற்றுவதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் விமர்சித்துள்ளார்.

முருகன்
முருகன்

By

Published : Sep 11, 2020, 10:27 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியில், மாவட்ட அளவிலான பாஜகவின் முதல் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "புதிய கல்விக் கொள்கையை வரவேற்று பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளது. புதிய கல்விக் கொள்கை தொழில் கல்வியை ஊக்குவிக்கிறது. தாய்மொழி கல்வி கற்கும் போது போட்டித்தேர்வு சந்திக்க வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய கிசான் திட்டத்தின் முறைகேடு பிரச்னை தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு துறையை அமைத்து விசாரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மும்மொழி கொள்கை இல்லை. அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ளது.

நவீன தீண்டாமையை ஸ்டாலின் பின்பற்றுகிறார். திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள் அனைத்திலும் பிற மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. பிற மொழிகளைக் கற்றுத் தர மாட்டோம் என ஸ்டாலின் முன்வரவேண்டும்.

கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தியதில் தமிழ்நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த கருப்பர் கூட்டம் யூ-டியூப் தொலைக்காட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details