கோயம்புத்தூர்:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ.குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல்வேறு துறைகளை மேம்படுத்த ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு, ட்ரோன் டெக்னாலஜி, நேனோ டெக்னாலஜி நீர்வள தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடியுள்ளோம்.
கடந்த இருபது ஆண்டுகளாக, இந்தியா, உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அட்வான்ஸ் டெக்னாலஜியை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதனை மீண்டும் விவசாயம் அல்லது வீடுகளுக்கு பயன்படுத்தும் முயற்சியில் மாதிரி ஒன்று செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீ குமார் ஏற்கனவே இதனை ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் இவர்கள் செய்துள்ளனர். ட்ரோன் டெக்னாலஜியை பொறுத்தவரை தாம் ஆள்களைக் கொண்டு இயக்கி வருகிறோம். ஆனால் ஆள்கள் இல்லாமல் அதனை இயக்கும் டெக்னாலஜி பற்றி அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இங்குள்ள ஆசிரியர்களுக்கு இந்த டெக்னாலஜி குறித்து கற்றுத் தர அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். முனைவர் (Phd) படிக்கும் மாணவர்களுக்கும் இஸ்ரேல் சென்று முயற்சியை மேற்கொள்ள வாய்ப்பு கிட்டும்.
இதன் மூலம் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு வலுப்படும் நமது பிரதமரும் கூட நாட்டு பிரதமருடன் ஒப்பந்தம் மேற்கொண்ட பொழுது விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படுங்க: நமக்கு காலம் குறைவாக தான் உள்ளது: மாநில தேர்தல் ஆணையர்