கோயம்புத்தூர்:மருதமலை சாலையிலுள்ள பி.என். புதூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமையுள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.