கோவை:உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக, கடந்த 23ஆம் தேதி அதிகாலை வெடித்து சிதறிய மாருதி காரில் இருந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். அப்போது, அந்த கார் இரண்டாக வெடித்து சிதறியதோடு, ஏராளமான ஆணிகளும் கோலி குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டதோடு, அவ்வப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பறிமுதல் செய்யப்பட்ட ஆணிகள்.. உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் மேற்கொண்ட விசாரணையில், 75 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியைச்சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்து 3 நாள் போலீஸ் காவலுக்குப்பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் - என்.ஐ.ஏ. விசாரணை தீவிரம் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு:தற்போது இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் கோவை மத்திய சிறையில் உள்ள 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஜ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். மேலும், அவர்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றும் பணியினையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின்.. முன்கூட்டியே நடந்த தாக்குல்:இந்நிலையில், கார் வெடித்ததில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதனுடன் சில டைரிகளையும் கைப்பற்றி உள்ளனர். அதில் 'ஜிகாத்'குறித்தும் உருவ வழிபாடுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும், புலியகுளம் விநாயகர் கோயில் மீது தாக்குதல் நடத்த திட்டமிருந்ததாகவும்; சில காரணங்களுக்காக ஈஸ்வரன் கோயில் முன்பு காரை வெடிக்க வைத்துள்ளதும் இன்று (நவ.2) போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிற மாநிலங்களுக்கு நீளும் விசாரணை: மேலும், இந்த தாக்குதல் திட்டமிட்ட 'தற்கொலைப் படைத் தாக்குதல்' என்றும்; இதன் பின்னணியில் கேரளா மற்றும் மங்களூருவைச் சேர்ந்த நபர்கள் உள்ளதால் அவர்களைத் தேடி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றுள்ளதாகவும் கார் வெடித்ததில் உயிரிழந்த ஜமேசா முபின் உடலில் 15-க்கும் மேற்பட்ட ஆணிகள் இருந்ததாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு - ‘எனது மகன்கள் குற்றவாளி இல்லை’... பரபரப்பு ஆதாரத்தை வெளியிட்ட தாய்...