தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே கள்ளச்சாராயம் விற்பதாகச் சந்தேகம்: ட்ரோன் மூலம் கண்காணிப்பு

பொள்ளாச்சி அருகே செம்மணபதி வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக எழுந்த சந்தேகத்தையடுத்து, ட்ரோன் கேமரா மூலம் மதுவிலக்கு காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்.
ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்.

By

Published : Jun 14, 2021, 12:23 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நேற்றுவரை (ஜூன் 13) தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி கள்ளச் சாராயம், பதுக்கல் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுவந்தது. பெரும்பாலான பகுதிகளில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செம்மணபதி வனப்பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல் துறையினருக்குச் சந்தேகம் எழுந்தது.

ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறை

இதையடுத்து மதுவிலக்கு காவல் துணைக்கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான காவலர்கள், நேற்று காலை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் இறுதியில் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்படவில்லை எனத் தெரியவந்தது.

இதையும் படிங்க : பிரபல ரவுடியின் கூட்டாளியிடமிருந்து 240 கிலோ கஞ்சா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details