கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா யோகா மையம் சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் ஆகியோரிடம் ஈஷா யோகா மையம் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் கரோனாவால் உயிரிழக்கும் நபர்களை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.
ஈஷா யோகா மையம் சார்பில் கோயம்புத்தூரில் உள்ள கிராமங்களில் பல்வேறு நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கரோனா காலத்தில் கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம், முன் களப்பணியாளர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கல் தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கரோனா நோயாளிகளை தகனம் செய்யும் சேவையும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: '+2 தேர்வு நிச்சயம்! ஆன்லைனில் நடத்தப்படாது' - அன்பில் மகேஷ்