தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம் - வனத்துறையினருக்கு பயிற்சி - tamil latest news

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியதால் வனத்துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

வனத்துறையினருக்கு பயிற்சி
வனத்துறையினருக்கு பயிற்சி

By

Published : May 19, 2020, 1:46 PM IST

தேசிய புலிகள் காப்பக ஆணையம் உத்தரவின்படி ஆண்டுதோறும் மே, டிசம்பர் மாதங்களில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான கோடை கால கணக்கெடுப்பு இன்று ( மே 19) முதல் தொடங்கி வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி வனச்சரக பகுதிகளில் அமைக்கப்பட்ட 62 நேர்கோட்டுப் பாதைகளில் வன ஊழியர்கள் குழுவாக பிரிந்து வனவிலங்குகளை கணக்கெடுப்பது முறை குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் முதல் மூன்று நாள்கள் மாமிசம், தாவர உண்ணி வனவிலங்குகளை எவ்வாறு கணக்கெடுக்க வேண்டுமென்றும், மீதமுள்ள மூன்று நாள்களில் வனவிலங்குகள் நடமாட்டம், கால் தடம், நக கீறல்கள், தாவரங்கள் ஆகியவைகளை எப்படி கணக்கெடுக்க வேண்டுமென்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக இந்த கணக்கெடுப்பில் தன்னார்வலர்கள் ஈடுபடவில்லை.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் எவ்வாறு இருக்கிறது, அதற்கு தேவையான உணவு கிடைக்கிறதா? என்பது முழுமையாக கண்டறியப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சாதியைக் கூறி இழிவுப்படுத்திய நபர்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

ABOUT THE AUTHOR

...view details