கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையான சுள்ளிகொம்பன், அப்பகுதியைச் சுற்றியுள்ள தோட்டங்களுக்குள் அவ்வப்போது புகுந்து வருகிறது. அதில் தென்னை, பலா, வாழை, புளியமரம் உள்ளிட்ட மரங்களை சூறையாடியும் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில் செல்லமுத்து, சிவகுமார், சந்தானம், ஜனார்த்தன பிரபு ஆகிய விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அங்கிருந்த மரங்களை சூறையாடி சேதப்படுத்தி உள்ளது. ஒற்றை யானையின் அட்டகாசம் தொடர்ந்து வருவதால் வனத்துறையினர் அதனை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; சேதம் அடைந்த தென்னைமரங்களுக்கு தமிழ்நாடு அரசு கூடுதலாக இழப்பீடுகள் தரவேண்டும் எனவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.