தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப பிரச்சனை காரணமாக பெண், குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை - Investigation of suicide of woman and children in Kovil

கோவை: குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனை காரணமாக பெண், குழந்தைகளுடன் தற்கொலை
குடும்ப பிரச்சனை காரணமாக பெண், குழந்தைகளுடன் தற்கொலை

By

Published : Nov 27, 2019, 9:58 AM IST

கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகுமார்-கௌரி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும், 11 வயதில் பிரனேஷ் என்ற மகனும் இருந்தனர்.

இந்த இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதால் வீட்டின் அருகில் உள்ள சிறப்பு பள்ளியில் படித்து வந்தனர். சிவகுமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு கௌரியிடம் சண்டைப்போட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து கௌரி தனது தந்தை வீட்டில் இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று வசித்து வந்தார். கௌரியின் தாய் வெளியூர் சென்றிருந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய கௌரியின் தாய் இரண்டு குழந்தைகளும், தனது மகளும் இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கௌரி, இரண்டு குழந்தைகளையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவனுடன் தகராறு - மனைவி இரு குழந்தைகளுடன் விஷம் குடித்த சோகம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details