கோவை:பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலைப் புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக சின்னார்பதி பகுதியில் பழங்குடியினத்தைச் சார்ந்த 48 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஒற்றைக் காட்டு யானை இரவு நேரங்களில் வந்து சின்னார்பதியில் உள்ள வாழை போன்றவற்றை உண்டு சென்றுள்ளது.
இதனையடுத்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை வனப்பகுதிக்குள் இருந்து மீண்டும் வந்த யானை வால்பாறை பொள்ளாச்சி ரோட்டில் ஒய்யாரமாக நடந்து வந்து சின்னார்பதி பழங்குடியினர் வசிக்கும் இடத்துக்கு உணவு தேடி சென்றுள்ளது.
தகவலறிந்து உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் இருந்து காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டி, வனப்பகுதிக்குள் அனுப்பிவைத்து தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை சாலையில் நடுரோட்டில் யானை வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:ஊழல் புகார்: கோவை ஆவின் விற்பனை மேலாளர் இடமாற்றம்