கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது சபீர் (21), வசந்தகுமார் (21), முகமது அர்ஷத் (20), கமர்தீன் (19), முகமது நியாஸ் (20) ஆவார். இவர்கள் ஐந்து பேரும் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலரை வழிமறித்து செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மாணவிகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம்! 5 பேர் கைது - upload the image
கோவை: பள்ளி மாணவிகளை வழிமறித்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த ஐந்து இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் தங்களை காதலிக்கவில்லை என்றால் புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோம் மிரட்டியுள்ளனர். இதற்கு மாணவிகள் மறுப்பு தெரிவிக்கவே, இளைஞர்கள் மாணவிகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையறிந்த மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்த காவல் துறையினர் ஐந்து பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.