தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் படேல் கல்லூரியை இணைக்க மாணவர்கள் போராட்டம்! - சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி

கோவை : ஜவுளித் துறையின் கீழ் இயங்கும் அவினாசி சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

Students struggle to join Patel College under TN Central University
மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் படேல் கல்லூரியை இணைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்!

By

Published : Feb 14, 2020, 6:23 PM IST

தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிற கோவை மாநகரத்தின் அவினாசி சாலையில் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி உள்ளது. முகாமைத்துவக் கல்லூரி மற்றும் பருத்தி ஆராய்ச்சி ஆராய்ச்சி மையமாக ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இயங்குகிறது.

மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் படேல் கல்லூரியை இணைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்!

இந்த கல்லூரியை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர கோரி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் படேல் கல்லூரியை இணைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்!
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ’கல்லூரியானது ஜவுளித் துறையின் கீழ் செயல்பட்டு வருவதால் அங்கு கல்விக் கட்டணம் போன்றவை உயர்ந்துகொண்டே போகிறது. அடிப்படை வசதிகளான விளையாட்டு மைதானக் கட்டணங்கள்கூட காரணமின்றி உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எனவே இதை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் (CUTN) கீழ் கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் கல்வி கட்டணங்கள் குறையும் அடிப்படை வசதிகள் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கும்’ என்று தெரிவித்தனர். மாணவர்களின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர காண காவல் துறையும், கல்லூரி நிர்வாகமும் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : மத்திய அரசின் திட்டப் பட்டியலில் தமிழ்நாட்டின் 179 திட்டங்கள் சேர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details