கோவையை அடுத்த தடாகம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.லீடர்ஸ் பப்ளிக் பள்ளியில் பசுமை விழிப்புணர்வு எனும் தலைப்பில் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மாணவ, மாணவிகளின் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் கோவை மண்டல பார்வையாளர் விவேக் நாயர் மேற்பார்வையில் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் பச்சை வர்ண ஆடை அணிந்து வரிசையாக மரம் போல் சில நிமிட நேரத்திற்குள் நின்று காட்சியளித்தனர். இதுகுறித்து பள்ளியின் தலைவர் ராஷிகா பேசுகையில் பசுமை புரட்சியை மாணவ, மாணவிகளிடமும் ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை முயற்சியை நடத்தியதாகவும், இதனால் இளம் தலைமுறையினர் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ள முடிவதாகத் தெரிவித்தனர்.