மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது! - students protest against caa by central government
கோவை: தமிழ்நாடு மாணவர் மன்றம் சார்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை
தமிழ்நாடு மாணவர் மன்றம்
கோவையில் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே தமிழ்நாடு மாணவர் மன்றம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக் கோரி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துக்கொண்டு மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தை மாணவர்கள் அனுமதியின்றி நடத்திய காரணத்தால் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பெண் அவமானப்படுத்தியதில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற மீனவர்
TAGGED:
tamilnadu manavar mandram arrest