தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மணி நேரத்தில் 8 கலைகளை செய்து மாணவர்கள் உலக சாதனை!

இந்தியாவில் முதல் முறையாக தற்காப்பு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 8 கலைகளை ஒரு மணி நேரத்தில், ஒரே இடத்தில் நிகழ்த்தி 1200 மாணவர்கள் உலக சாதனைப் படைத்துள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் 8 கலைகளை செய்து மாணவர்கள் உலக சாதனை
ஒரு மணி நேரத்தில் 8 கலைகளை செய்து மாணவர்கள் உலக சாதனை

By

Published : Jan 22, 2023, 3:43 PM IST

கோயம்புத்தூர்: தீத்திபாளையம் சி.எம்.சி பள்ளி மைதானத்தில் பைட்டர்ஸ் அகாடமி சார்பில் எட்டு பாதுகாப்பு கலைகளை மாணவர்கள் நிகழ்த்தி நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 1200 மாணவர்கள் கலந்து கொண்டு, உலக சாதனைப் புரிந்துள்ளனர். இதில் சிலம்பம், கராத்தே, குங்பூ, யோகா, ஸ்கேட்டிங், அம்பு எய்தல், ஓவியம் வரைதல், பரதநாட்டியம் போன்ற போட்டிகள் ஒரு மணி நேரத்தில் செய்து சாதனை படைக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் 8 கலைகளை செய்து மாணவர்கள் உலக சாதனை!

இந்த சாதனையை அங்கீகரித்த நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம், இதில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியது. குழந்தைகள் அலைபேசி மோகத்தை தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும், என்பதற்காக இம்மாதிரியான போட்டிகள் அவர்களை ஊக்குவிக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்து படிக்கட்டு வழியே கீழே விழுந்த குழந்தை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details