தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாடலுக்கு யோகா செய்து அசத்தும் மாணவி

கோவை: கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வைஷ்ணவி என்ற மாணவி, கரோனா விழிப்புணர்வுப் பாடலுக்கு யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Student performing yoga
Student performing yoga

By

Published : Apr 26, 2020, 2:10 PM IST

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியைச் சார்ந்த சரவணகுமார் - விமலா தம்பதியினரின் மூத்த மகள் வைஷ்ணவி. இவர் இந்தாண்டு நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளார்.

இவர் யோகாவில் சர்வதேச அளவில் பதக்கங்களையும் பெற்று, பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார். தற்சமயம் உலகத்தையே கரோனா தொற்று அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

கரோனா பாடலுக்கு யோகா செய்து அசத்தும் மாணவி

இந்நிலையில், பலரும் கரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கிடையே ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மாணவி வைஷ்ணவி கரோனா பாடலுக்கு யோகா செய்யும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: மதுரையில் 2 காவலர்களுக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details