கோவை, மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளத்திற்கு, வடவள்ளி பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர் சென்றனர்.
இந்த குளத்தில் 7 அடி அழமுள்ள பகுதிக்கு தவறுதலாக சென்றபோது அன்புச்செல்வன் என்ற மாணவன் நீரில் மூழ்கி தத்தளித்தார். நீச்சல் தெரியாத மற்ற மாணவர்கள் பதற்றத்தில் மாணவனை காப்பாற்றும்படி சத்தம் எழுப்பி உள்ளனர்.
அங்கே காவல் பணியில் இருந்த தேவராஜ் (60) மாணவனை மீட்க தண்ணீரில் குதித்து உள்ளார். இதில் இருவரும் நீச்சல் குளம் ஆழமாக பகுதிக்கு சென்று, தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இது குறித்துவடவள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முறையாக நீச்சல் பயிற்சியாளர்கள் இல்லாததும், முதலுதவிக்கு எந்த உபகரணமும் இல்லாததே, இருவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.