தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் குற்றவாளிகளின் விடுதலை எதிர்த்து போராட்டம்: பொதுமக்கள் அவதி - பாலியல் குற்றவாளிகளின் விடுதலை எதிர்த்து போராட்டம்

கோயம்புத்தூர்: பாலியல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாலகாட்டில் இன்று நடைபெற்ற போராட்டத்தால், பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்ல பேருந்து இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

coimbatore strike

By

Published : Nov 5, 2019, 11:42 PM IST


கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறையினர் போதுமான ஆதாரங்களைத் தாக்கல் செய்யாததால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருவரும் சிலதினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாலக்காடு மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு அடைப்பால் பேருந்து இன்றி அவதிக்குளான மக்கள்

பாலியல் குற்றவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்பதால் காவல்துறையினர் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு உள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


இதையும் வாசிங்க : கோரையாறு அருவி சுற்றுலாத்தல அந்தஸ்தை இழந்தது ஏன்? - சிறப்பு தொகுப்பு

இதன் காரணமாக பொள்ளாச்சியிலிருந்து பாலக்காட்டிற்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கேரளா செல்வதற்காக வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்து இல்லாததால் அவதிக்குள்ளாகினர்.

ABOUT THE AUTHOR

...view details