தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பாக நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

கோயம்புத்தூர்: உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெப் கேமரா மூலமாகவும்,  நுண் தேர்தல் பார்வையாளர்கள் மூலமாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

strict supervision for second phase local body election
strict supervision for second phase local body election

By

Published : Dec 31, 2019, 8:56 AM IST

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் 1,214 பதவிகளுக்கு 4,017 வேட்பாளர்கள் உள்ளனர்.

ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 5 லட்சத்து 47 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் 415 வாக்குச்சாவடி மையங்களில் 878 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

152 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டன. மேலும் 37 மையங்களில் ஒளிப்பதிவு செய்யவும் 35 மையங்களில் வெப் கேமரா மூலமும் கண்காணிப்புப் பணொ தீவிரப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 80 மையங்களில் நுண் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ஊராட்சி ஒன்றியத் தேர்தல்

தேர்தல் பணிக்கு 6970 வாக்குப்பதிவு அலுவலர்கள் 3,350 காவலர்கள், 318 ஹோம் கார்ட்ஸ், 119 முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முதல் கட்ட வாக்குப்பதிவில் 77.23 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதையும் படிங்க: 'கட்சி, மதம், சாதி பாகுபாடின்றி வாக்களியுங்கள்' - ஜக்கி வாசுதேவ்

ABOUT THE AUTHOR

...view details