தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!

கோவையில் தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

By

Published : Apr 28, 2021, 9:00 PM IST

கோவை ப்ரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள சீத்தாலட்சுமி நகர் நல மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தடுப்பூசி போடவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதேபோல கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(65). முதியவர் இன்று (ஏப்ரல் 28) தடுப்பூசி போட வந்துள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றமடைந்த முதியவர் செய்தியளர்களிடம் கூறுகையில் ’’நான் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வந்தேன். ஸ்டாக் இல்லை எனக்கூறி வெள்ளிக்கிழமை வருமாறு தெரிவித்தனர். பின்னர், பல இடங்களிலும் தடுப்பூசி இன்று போடப்படவில்லை’’ என்று கூறுகினார்.

இதுகுறித்து, கோவை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரமேஷிடம் விசாரிக்கும் போது கோவையில் எட்டு ஆயிரத்து 460 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. கையிருப்பில் உள்ள குறைந்தளவிலான தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை கோவையில் மூன்று இலட்சத்து 58 ஆயிரத்து 720 பேருக்கு போடப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை மாவட்ட அளவிலும் தொடங்க வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details