கோயம்புத்தூர் மாவட்டம், கரட்டுமேடு பகுதியில் அரசு மாநகராட்சி ஆரம்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் ஜெயந்தி என்பவர் கடந்த 19ஆம் தேதி அதே பள்ளியில் படிக்கும் வெண்ணிலா, பூபதி ஆகிய இருமாணவர்களையும் சாதி பெயர் சொல்லி திட்டி, கழிவறையை சுத்தம் செய்யக்கோரி வற்புறுத்தியுள்ளார்.
சாதியை சொல்லி திட்டிய தலைமையாசிரியர் மீது நடவடிக்கை தேவை - பெற்றோர்கள் மனு
கோவை: அரசு பள்ளியில் மாணவர்களை சாதி பெயரை சொல்லித் திட்டி , கழிவறையை சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்திய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து அந்த மாணவர்கள் பள்ளியில் நடந்தவற்றை தங்களது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமையாசியர் தனது கணவர், உயர் அலுவலர்களின் கீழ் வேலை செய்து வருவதால், எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட தலைமையாசியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.