கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
‘குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம்’ - ஸ்டாலின் - உள்ளாட்சி தேர்தல்
கோவை: குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம் என சூலூர் இடைத்தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, கிராம மக்களிடம் திண்ணை பரப்புரையை மேற்கொண்ட ஸ்டாலினிடம் குடிநீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதே காரணம் எனவும், திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து செய்யப்படும், கேஸ் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த அவர், அதிமுக ஆட்சி எந்த மக்கள் பிரச்னைகளை குறித்தும் கண்டுகொள்ளாமல் தங்களை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனமாக உள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.