தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இப்போது நடப்பது அரசே அல்ல; ஊழல்வாதிகளின் கோட்டை' - திமுக தலைவர் ஸ்டாலின் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

கோயம்புத்தூர்: 'இப்போது நடப்பது அரசே அல்ல; ஊழல்வாதிகளின் கோட்டை' என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் உரை
திமுக தலைவர் ஸ்டாலின் உரை

By

Published : Feb 19, 2021, 11:08 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியா மைதானத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு 100 நாட்களில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.

தீர்க்கப்படாத பிரச்னைகள் இருப்பின் பொதுமக்கள் நேரடியாக கோட்டைக்கே ரசீதுடன் வந்து கேட்கலாம். தேர்தலுக்காகவும் அரசியலுக்காகவும் மட்டும் வருபவன் நான் இல்லை. எப்போதும் உங்களுடன் இருப்பவன் நான்.

திமுக தலைவர் ஸ்டாலின் உரை

அதிமுக செய்யத் தவறிய கடமையை திமுக அரசு மக்களுக்கு செய்து கொடுக்கும். இதனால் ஒரு கோடி குடும்பங்கள் பலன் அடைவார்கள். இப்போது நடப்பது அரசே அல்ல; ஊழல்வாதிகளின் கோட்டை. இதில் முக்கியமானவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

ஊராட்சிக்கு ஒரு கோடி வீதம் 12,500 ஊராட்சிகளில் 12,500 கோடி ரூபாயை அமைச்சர் வேலுமணி ஊழல் செய்திருக்கிறார். சமீபத்தில் வாழும் காமராசர் என முதலமைச்சர் எடப்பாடியை வேலுமணி புகழ்ந்து உள்ளார். இதை விட பெரிய அவமானம் காமராசருக்கு இல்லை.

ஆளுங்கட்சியை சேர்ந்த கான்ட்ராக்டர்கள் கூட ஒப்பந்தங்களில் நுழைய முடியாதபடி வேலுமணி தனக்கு வேண்டியவர்களுக்கு கான்ட்ராக்ட் பெற்று கொடுக்கின்றார். அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன் தான் கோவையில் அமைச்சர் போல செயல்படுகிறார்.

அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் வருவாய் ஆரம்பத்தில் 17 கோடியாக இருந்தது. இப்போது அந்த நிறுவனத்தின் வருவாய் 3000 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஊழல் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை உடைத்து, அதனை குழி தோண்டி புதைப்போம்" என்றார்.

இதையும் படிங்க: விவசாய கடனை தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக அரசுதான்' - அமைச்சர் செல்லூர் ராஜு!

ABOUT THE AUTHOR

...view details