மிலாடி நபியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு நேற்று (அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கோவை மாவட்டம் அன்னூர் ஒதிமலை சாலையிலுள்ள குளக்கரையில் நேற்றிரவு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக அன்னூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சட்ட விரோதமாக மது விற்ற இலங்கை அகதி கைது - அன்னூரில் 51 மது பாட்டில்கள் பறிமுதல்
கோவை: அன்னூரில் சட்ட விரோதமாக மது விற்ற இலங்கை அகதியை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 51 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது குளத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 51 மது பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இதையடுத்து அன்னூர் காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அவரது பெயர் அசோக்குமார் என்பதும், இலங்கை அகதியான அவர் பவானிசாகர் அகதிகள் முகாமில் வசித்துவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.