இலங்கையைச் சேர்ந்த தாதா அங்கொடா லொக்கா, பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் வசித்துவந்தார். இவர் கடந்த ஜூலை 3ஆம் தேதி இரவு கோவையில் சேரன் மாநகர் பகுதியில் உயிரிழந்தது தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டர். அதைத்தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அங்கொடா லொக்கா மரணம் இயற்கையானது - சிபிசிஐடி - அங்கோடா லொக்கா மரணம் இயற்கையானது
கோயம்புத்தூர்: இலங்கை போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா மரணம் இயற்கையானது என சிபிசிஐடி தரப்பினர் கூறியுள்ளனர்.
இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழவே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கை ரவுடி அங்கொடா லொக்கா மரணம் குறித்த வழக்கை விசாரிக்க ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி பிரிவினர் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அங்கொடா லொக்காவின் கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ஆய்வகத்திற்கு எடுத்து சென்று ரசாயன பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அங்கொடா லொக்காவின் உடலில் விஷம் ஏதும் இல்லை. அவர் மாரடைப்பாலே இறந்திருக்க கூடும் என்றும் சிபிசிஐடி தரப்பினர் கூறியுள்ளனர். லொக்காவின் டி.என்.ஏ பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.