கோயம்புத்தூரில் சில நாட்களுக்கு முன் சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், "கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் எதுவும் கோவை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றப்படாததன் மர்மம் என்ன? தீர்மானங்களை பதிவேற்றினால் எங்கே தாங்கள் செய்த முறைகேடுகள் எல்லாம் வெளியே வந்து விடுமோ? என்ற அச்சம் காரணமாகவே மாநகராட்சியின் தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் மாநகராட்சி காலம்தாழ்த்துகிறதா?" என்பது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஆலயம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் இயக்குநர் ரங்கராஜ், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உதவியுடன் ஆலயம் பவுண்டேசன் நிறுவனம் டெண்டர் பெற்றிருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை எம்.எல்.ஏ கார்த்திக் வெளியிட்டிருந்தார்.