கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரியப்பன். இவர் அப்பகுதியில் சாந்தி சைசிங் ஆலை என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வார்ப்பட நூற்பாலை நடத்திவருகிறார்.
நேற்று (ஏப்ரல் 11) இரவு இவரது நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவெனப் பரவி பற்றி எரியத் தொடங்கியது. இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அன்னூர், அவிநாசி, பீளமேடு, பல்லடம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர், தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கருமத்தம்பட்டி சோமனூர் பகுதிகள் நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் நிறைந்த பகுதிகளாகும். இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலையில் வெளியூரிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் அதிக அளவில் பொருள்சேதம் ஏற்படுகிறது.