தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் உதவி ஆய்வாளர்கள் சிறப்புக் கூட்டம்! - கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறையினர்

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

உதவி ஆய்வாளர்
உதவி ஆய்வாளர்

By

Published : Jul 10, 2020, 5:04 AM IST

கோயம்புத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன, பொதுமக்கள் நல்லுறவு, கைது செய்வது குறித்தும் உச்சநீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகள் போன்ற விளக்கங்கள் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் பிறப்பித்த வழிமுறைகளை கடைப்பிடிக்கமாறும் வலியுறுத்தப்பட்டது.
அந்த வழிமுறைகள் வருமாறு:-

  1. ஊரடங்கு விதி மீறல் எங்கு நடந்தாலும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.
  2. கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே கைது செய்ய வேண்டும்.
  3. காவல் பணியாளர்கள் பொதுமக்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளக்கூடாது தேவையில்லாமல் மக்களை கடிக்கக் கூடாது.
  4. பொது மக்களின் நல்லுறவை வளர்த்துக்கொள்ள காவல்துறையினர் முயற்சி செய்ய வேண்டும்.
  5. சமூக காவல் முறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
  6. காவலில் உள்ள குற்றவாளிகளை கையாளும் பொழுது காவல்துறைக்கு இடமில்லாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
  7. மாவட்ட தனிப்பிரிவு தரப்பில் தகவல் அளிக்கும் பொழுது எவ்வித தொய்வும் இருக்கக்கூடாது மூத்த அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து விட வேண்டும்.
  8. ஊரடங்கு அமல் அகற்றும்போது பொதுமக்களுடன் இரக்கமுள்ள அணுகு முறையையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: முதலமைச்சர் நிதிக்கு ரூ.34 லட்சம் வழங்கிய டெக்னிப் இந்தியா நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details