பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் பேருந்துகளில் இன்று கூட்டம் அலைமோதியது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாள்கள் அரசு விடுமுறை உள்ளதால், வால்பாறையிலிருந்து வெளியூர் சென்று பணியில் இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வால்பாறைக்கு செல்வதற்கு பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வால்பாறைக்கு கூடுதலாக 55 பேருந்துகள் இயக்கம் - special bus arranged for pongal fesival
கோவை: பொங்கலை முன்னிட்டு பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு கூடுதலாக 55 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
![வால்பாறைக்கு கூடுதலாக 55 பேருந்துகள் இயக்கம் special bus arranged for pongal fesival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5696843-thumbnail-3x2-hja.jpg)
special bus arranged for pongal fesival
சிறப்புப் பேருந்துகள்
இதுகுறித்து அரசுப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவிக்கையில், ”பொங்கல் திருநாளையொட்டி வால்பாறைக்கு 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மலைப்பாதை என்பதால் பேருந்துகள் வந்து சேர தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி விரைவில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
TAGGED:
pollachi to valparai bus