தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சி அமைத்த ஓராண்டில் 85 % பேர் எதிர்ப்பு - எஸ்பி வேலுமணி - sp velimani

திமுக ஆட்சி அமைத்த ஓராண்டில் 85 விழுக்காடு மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக நம்மை ஒன்றும் தூக்கில் எல்லாம் போட முடியாது
திமுக நம்மை ஒன்றும் தூக்கில் எல்லாம் போட முடியாது

By

Published : May 23, 2022, 12:32 PM IST

Updated : May 23, 2022, 12:37 PM IST

கோவை சிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களுக்காக எதையும் செய்யாமல் விளம்பரத்தில் ஓடும் அரசாக திமுக உள்ளது. அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடும் திமுகவினர் நம்மை மட்டும் மிரட்டவில்லை ,ஊடகங்களையும் மிரட்டுகிறார்கள். ஆட்சி அமைத்த ஒரு ஆண்டில் திமுக 85% மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளனர் என்று மக்களின் கருத்துகணிப்பு செய்திகள் வெளியாகிறது. என் மீது எத்தனை வழக்கு போட்டாலும் திமுக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எந்திரத்தில் குளறுபடி செய்துதான் வெற்றி பெற்றார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.

தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் கவலைப்படவேண்டாம். திமுக எத்தனை வழக்கு போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம், அதை திறம்பட கையாள வழக்கறிஞர் பிரிவு தயாராக உள்ளது. திமுகவினர் நம்மை தூக்கில் போடமுடியாது, திமுகவினர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை ஆதாரத்துடன் மக்களிடம் கொண்டு சேருங்கள். தமிழகத்தில் பெரிய கட்சி என்றால் அதிமுகதான், 17 லட்சம் தொண்டர்களுடன் புரட்சி தலைவர் உருவாக்கிய கட்சியை ஒன்றறை கோடி தொண்டர்களாக மாற்றியது ஜெயலலிதா தான்.

திமுக நம்மை ஒன்றும் தூக்கில் எல்லாம் போட முடியாது

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி. சில ஊடகங்கள் விவாத நிகழ்ச்சியில் வாய்ப்பளிக்காததால் மற்ற ஊடகங்களில் அதிமுகவினர் பங்கு பெறுவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. சில ஊடகங்கள் தற்பொழுது மாறிவருகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் ரவுடி ராஜ்யம் மற்றும் மின்வெட்டும் வந்துவிடும் என்பதால் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கவலைப்பட வேண்டாம், உங்களுடன் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் என இருபெரும் தலைவர்கள் துணையாக இருப்பார்கள். ஊடகத்துறையினர் யாருக்கும் பயப்படாமல் நேர்மையாக செய்திகளை வெளியிடுங்கள். நீட்டை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது. சமீபத்தில்கூட மேட்டுப்பாளையத்தில் சகோதரி ஒருவர் நீட் அச்சத்தால் உயிரிழந்தார். ஊடகங்கள் அவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வாருங்கள் என்று ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றினார்.

இதில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர்.ஜெயராமன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், அதிமுக அமைப்பு செயலாளர் எ.கே செல்வராஜ், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Last Updated : May 23, 2022, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details