கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதையடுத்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.
அப்போது அங்கு வந்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர் கிருமி நாசினியை வாகனங்கள் மூலம் தெளிக்க முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் அனுமதியின்றி வாகனங்களில் கிருமி நாசினியை தெளிக்க கூடாதெனக் கூறி, வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.