தென்மேற்குப் பருவ மழை: கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு! - கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
![தென்மேற்குப் பருவ மழை: கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு! கோவை குற்றாலம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:54:12:1594988652-tn-cbe-03-kovai-kutralam-visu-7208104-17072020171610-1707f-02154-809.jpg)
கோவை குற்றாலம்
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், கோயம்புத்தூர் குற்றாலத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.